/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்... இலவச கோதுமை! முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
/
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்... இலவச கோதுமை! முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்... இலவச கோதுமை! முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்... இலவச கோதுமை! முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
ADDED : டிச 16, 2025 05:30 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கு மாதந்தோறும் தலா 2 கிலோ இலவச கோதுமை வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரேஷன் கடைகளில் தற்போது சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு 20 இலவச அரிசியும், மஞ்சள் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகின்றது. மாநிலத்தில் சர்க்கரை நோயாளிகள் பயன்பொறும் வகையில் கோதுமை வழங்க வேண்டும் என்ற குரலும் சட்டசபையில் எதிரொலித்தது. அப்போது அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
முதல்வரின் அறிவிப்பு செயல்வடிவம் கொடுத்தும் பணியில் குடிமை பொருள் வழங்கல் துறை கான்பெட் நிறுவமான டெண்டர் பணிகளை மேற்கொண்டு வந்தது. தற்போது அனைத்து டெண்டர் பணிகளும் இறுதி செய்து அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு தலா 2 கிலோ இலவச கோதுமை வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தை திலாஸ்பேட்டை ரேஷன் கடையில் 2 கிலோ இலவச கோதுமையை பொதுமக்களுக்கு வழங்கி, முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார். தற்போது அக்டோபர், நவம்பர் மாதத்திற்கு தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட உள்ளது. இன்னும் இரண்டு தினங்களுக்குள் அனைத்து தொகுதிகளிலும் இந்த 4 கிலோ இலவச கோதுமை விநியோகம் செய்யும் பணி ரேஷன்கடை வாயிலாக துவங்கிவிடும். 20 நாட்களுக்குள் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் இலவச கோதுமையில் கையில் சேர்ந்துவிடும். தொடர்ந்து மாதந்தோறும் இலவச கோதுமை தடையில்லாமல் ரேஷன் கடைகளில் இனி வழங்கப்படும் என குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரேஷன்கார்டுகளை பொருத்தவரையில் புதுச்சேரி பிராந்தியத்தில் 2,63,386 ரேஷன்கார்டுகள், காரைக்காலில்- 60,225, மாகே-7,981, ஏனாம்-15,498 என மொத்தம் 3,47,090 ரேஷன்கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன் கார்டுகளுக்கு இலவச கோதுமை விநியோகம் செய்ய மாதந்தோறும் புதுச்சேரி பிராந்தியத்திற்கு- 521 மெட்ரிக் டன், காரைக்கால் -120, மாகே -16, ஏனாம்-31 என 688 மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட உள்ளது. இலவச கோதுமை திட்டத்தின் மூலம் புதுச்சேரி அரசுக்கு கூடுதலாக மாதத்திற்கு 3.25 கோடி ரூபாய் செலவாகும். சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவில்லை குறிப்பாக இலவச கோதுமை திட்டம் அறிவித்தார். அது என்ன ஆனது என காங்.,தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வந்தன.
இப்போது தேர்தலுக்கு முன்பாகவே சட்டசபையில் அறிவித்தப்படி இலவச கோதுமை திட்டத்தை துவக்கி வைத்து, தனது பாணியில் முதல்வர் ரங்கசாமி எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

