தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இலவச யோகா பண்பு பயிற்சி வரும் 1ம் தேதி துவங்குகிறது

 இலவச யோகா பண்பு பயிற்சி வரும் 1ம் தேதி துவங்குகிறது

 இலவச யோகா பண்பு பயிற்சி வரும் 1ம் தேதி துவங்குகிறது


ADDED : ஏப் 22, 2026 08:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 08:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சிவராம்ஜி யோகா மையம் மற்றும் சமர்ப்பணம் சேவை மையம் இணைந்து நடத்தும் ஐந்தாம் ஆண்டு இலவச யோகா பண்பு பயிற்சி முகாம் வரும் 1ம் தேதி துவங்குகிறது.

மாணவர்களிடையே ஒழுக்கம், பண்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முகாம் மூலக்குளம், அமிர்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது.

பாரதப் பண்பின் படி இந்த முகாமில் யோகா மற்றும் பிராணாயாமம், ​தற்காப்புக் கலைகளான களரி மற்றும் சிலம்பம்,​ பரதநாட்டியம், இசை, ஓவியம் மற்றும் கதை சொல்லுதல்,​ விளையாட்டுப் போட்டிகள், வினாடி - வினா மற்றும் மருத்துவம் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

முகாமில் 8 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். முகாம் மே 1ம் தேதி துவங்கி மே 7ம் தேதி வரை தினமும் காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும். பங்கேற்கும் மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.

முகாமில் பங்கேற்க விரும்புவோர் வரும் ஏப்ரல் 25 மற்றும் 26ம் தேதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணிக்குள் மூலக்குளம் அமிர்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நேரில் வந்து முன்பதிவு செய்ய வேண்டும்.

​முன்பதிவிற்கு, 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ​ஆதார் கார்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் நகல்கள் கொண்டு வரவேண்டும்.

​இந்த சேவை முகாமிற்கு பொதுமக்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு 80ஜி பிரிவின் கீழ் வருமான வரிவிலக்கு அளிக்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு 90805 65523, 94432 14535 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என, சிவராம்ஜி யோகா மையம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us