தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் பிரான்ஸ் நலச்சங்கம் வழங்கல்

 அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் பிரான்ஸ் நலச்சங்கம் வழங்கல்

 அரசு பள்ளிக்கு கம்ப்யூட்டர் பிரான்ஸ் நலச்சங்கம் வழங்கல்


ADDED : ஜன 28, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏம்பலம் அரசு தொடக்கப் பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரான்ஸ் தமிழர்கள் சமூக நலச்சங்கம் சார்பில் பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கும் விழா நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். 4ம் வட்டம் துணை ஆய்வாளர் திருவரசன், ஐடியல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முகுந்தன் முன்னிலை வகித்தனர்.

விழாவில், நலச்சங்கத்தின் துணை தலைவர் அருண் பார்த்தசாரதி, செல்வி, அலிஸ் கொரி தோன், வில்லியனுார் நண்பர்கள் வட்டம் செல்வராசு லட்சுமணன், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டரை வழங்கினர்.

இதில், வாஞ்சிநாதன், இளந்தொண்டர் மன்ற நிறுவனர் ராமன், லட்சுமணன், தசரதன், ரஜினி முருகன், பரசுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us