/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி எப்.எஸ்.டி.ஏ., பள்ளி மாணவர்கள் சாதனை
/
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி எப்.எஸ்.டி.ஏ., பள்ளி மாணவர்கள் சாதனை
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி எப்.எஸ்.டி.ஏ., பள்ளி மாணவர்கள் சாதனை
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி எப்.எஸ்.டி.ஏ., பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : டிச 13, 2025 05:22 AM

திருபுவனை: திருபுவனை எப்.எஸ்.டி.ஏ., மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள் வென்ற சாதனை படைத்தனர்.
புதுச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த மாநில சிலம்பம் போட்டியில் திருபுவனை எப்.எஸ்.டி.ஏ., மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தியா, யாதேஸ்வரன், ஜெகதீப் ஆகியோர் 3 தங்கப் பதக்கம், 6 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் வென்றனர்.
விருதுநகர் மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் லத்தி போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் கபிலேஷ், யாதேஸ்வரன், தருண், சந்தோஷ் ஆகியோர் 4 தங்கப் பதக்கம், 1 வெள்ளி பதக்கம் மற்றும் 3 வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
அவர்களுக்கு பள்ளி யில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி நிர்வாகி ஜெயவேல் மாணவர்களை பாராட்டினார்.
பள்ளி முதல்வர் ஒயிட்தாசன், சிறப்பாசிரியர் ரோஸ்லின் லில்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் சந்திரசேகர் வரவேற்றார்.
சிலம்பம் பயிற்சியாளர் அபுல்கலாம், உடற்கல்வி ஆசிரியர் சிவா உட்பட பலர் பங்கேற்றனர்.
மாணவர் ஜாஸ்பர் நன்றி கூறினார்.