ADDED : அக் 10, 2026 01:46 AM

அ நிறம் | அளவு
நெய்வேலி: ஜாமினில் வந்து தலைமறைவானவரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 21 ல் உள்ள சித்திரை வீதியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் பாரதி, 21. தெர்மல் போலீஸ் நிலைய வழக்கில் கைதனா இவர், தினமும் விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் நெய்வேலி கோர்ட் ஜாமின் அளித்தது.
ஜாமினில் வெளியே வந்தவர் கோர்ட் உத்தரவுப்படி விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திடவில்லை.
அதனையொட்டி, அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டி தெர்மல் இன்ஸ்பெக்டர் சந்திரன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனையேற்று, மாஜிஸ்தரேட் ஜாமினை ரத்து செய்தார்.
அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த பாரதியை, ெதர்மல் போலீசார், பாரதியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
