/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுாரில் பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்: பக்தர்கள் பங்கேற்பு
/
வில்லியனுாரில் பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்: பக்தர்கள் பங்கேற்பு
வில்லியனுாரில் பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்: பக்தர்கள் பங்கேற்பு
வில்லியனுாரில் பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்: பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மே 13, 2025 05:54 AM

வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு நேற்று மாலை 40வது ஆன்மிக நடைபயணம் சென்றனர்.
வில்லியனுாரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் ஆலயம் உள்ளது. அதனை சுற்றிலும் பிரசித்திபெற்ற ஆறு சிவாலயங்களும் 18 சித்தர்கள் ஜீவ சமாதியும் அமைந்துள்ள ஆன்மிக பூமியாக திகழ்கிறது. திருவண்ணாமலை கிரிவலம் போன்று, பவுர்ணமி நாளில் திருக்காமீஸ்வரர் கோவிலில் துவங்கி ஆன்மிக நடைபயணம் செல்லுகின்றனர்.
சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி சிறப்பு மிக்கதாகும். 12 மாதங்களில் செல்லும் ஆன்மிக நடைபயணத்தின் பலன் இந்த சித்திரை மாத பவுர்ணமிக்கு நடைபயணத்திற்கு உண்டு. அப்படிபட்ட சித்திரை மாத பவுர்ணமி நடைபயணம் நேற்று மாலை 6:00 மணிக்கு துவங்கிய 40வது ஆன்மிக நடைபயணம், நான்கு மாட வீதிகளில் உள்ள அம்மன், விநாயகர், தென்கலை வரதராஜபெருமாள் கோவில்களில் வழிபட்டனர்.
தொடரந்து அனந்தம்மாள் மடம் ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரன் கோவில், மூலக்கடை பாடல் பெற்ற வினாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய்சுவாமி சீத்தர் பீடம், வி.மணவெளி, ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு வழியாக காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் தரிசனம் முடித்து, சங்கராபரணி ஆறு மேம்பாலம் வழியாக திருக்காஞ்சி கெங்கைகாவராக நதீஸ்வரர் கோவில், உறுவையாறு சாய்பாபா கோவில், கோட்டைமேடு வழியாக மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலை வந்தடைந்தனர்.
திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்ல முடியாத புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள், சிவனடியார்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் வில்லியனுார் திருக்காமீஸ்வரர் ஆலய ஆன்மிக நடைபயனத்தில் கலந்துகொண்டனர்.