/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.20 ஆயிரமாக உயர்வு
/
ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.20 ஆயிரமாக உயர்வு
ADDED : ஜன 17, 2025 05:57 AM
புதுச்சேரி: முதியோர் பென்ஷன்தாரர்களின் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் 1.81 லட்சம் பேர் முதியோர் பென்ஷன் பெறுகின்றனர். இவர்களில் 55 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மாதம் ரூ.2,000; 60-79 வயதினருக்கு ரூ. 2,500; 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ. 3,500 வழங்கப்படுகிறது.
மேலும், முதியோர் பென்ஷன் வாங்குவோர் இறந்துவிட்டால், ஈமச்சடங்கு நிதியாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை வாயிலாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஈமச்சடங்கு தொகையை, தற்போது,ரூ. 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை வாயிலாக அரசாணை பிறப்பித்துள்ளது.
இது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள் கூறுகையில், 'உயர்த்தப்பட்ட முதியோர் பென்ஷன்தாரர் ஈமச்சடங்கு நிதியுதவி, கடந்த டிசம்பர் 13ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பென்ஷன் வாங்கும் முதியோர் இறந்துவிட்டால் அவரின் அசல் முதியோர் பென்ஷன் அட்டை, நகல் ஆதார், வங்கி கணக்கு, ரேஷன்கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் துறை அலுவலகத்தை அணுக வேண்டும்.
விண்ணப்பத்தினை பெற்று, பூர்த்தி செய்து, இறந்தவரின் வாரிசின் அனைத்து ஆவணங்களை இணைத்து சமர்பிக்க வேண்டும்.
டிசம்பர் 13ம் தேதிக்குள் முன் இறந்து இருந்தால், பழைய ஈமச்சடங்கு நிதியான ரூ.15 ஆயிரம் மட்டுமே பெற முடியும்' என்றார்.