/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பம் கோவிலில் கந்தர்சஷ்டி பெருவிழா
/
அரியாங்குப்பம் கோவிலில் கந்தர்சஷ்டி பெருவிழா
ADDED : அக் 19, 2025 03:48 AM
புதுச்சேரி: அரியாங்குப்பம் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் கந்தர்சஷ்டி பெருவிழா வரும் 22ம் தேதி துவங்குகிறது.
அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா மற்றும் திருக்கல்யாண பெரு விழா வரும் 22ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நடக்கிறது.
23ம் தேதி முதல் 28ம் தேதி வரை தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. 25ம் தேதி மாலை 6:30 மணிக்கு முருகப்பெருமான் சிவ பூஜை செய்தல், 26ம் தேதி இரவு 8:00 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சி, 27ம் தேதி மாலை 4:30 மணிக்கு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடக்கிறது.
28ம் தேதி காலை 9.05 மணிக்கு வள்ளி தெய்வாணை சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கமலஜோதி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர் .