/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிவசுப்ரமணியர் கோவிலில் கந்தர்சஷ்டி சூரசம்ஹாரம்
/
சிவசுப்ரமணியர் கோவிலில் கந்தர்சஷ்டி சூரசம்ஹாரம்
ADDED : அக் 29, 2024 06:09 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி சூரசம்ஹார விழா வரும் 1ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி, வரும் 1ம் தேதி மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, விநாயகர் அபிஷேகம், மிருத்சங்கரணம் நடக்கிறது.
வரும் 2ம் தேதி மதியம் 2:30 மணிக்கு முருகன் கலச பிரதிஷ்டை, யாகசாலை பூஜைகள் ஆரம்பம், மாலை 6:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
தொடர்ந்து, தினமும் சுவாமி சிறப்பு அபிஷேகம், யாக சாலை பூஜைகள், தீபாராதனை நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக, 6ம் தேதி இரவு 8:00 மணிக்கு அன்னையிடம் இருந்து சக்திவேல் வாங்குதல், 7ம் தேதி இரவு 8:00 மணிக்கு விஸ்வரூபம் காட்டி முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்து, சேவலும், மயிலுமாக ஆட்கொள்ளுதல் நடக்கிறது.
வரும் 8 ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், முத்துப்பல்லக்கு வீதியுலா நடக்கிறது. 9ம் தேதி இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவமும், 10ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.