ADDED : செப் 12, 2026 07:14 PM
புதுச்சேரி: புதுச்சேரி ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் தொடக்கநிலைப்பள்ளி மாணவர்கள் விநாயகர் படங்களைப் பல்வேறு வண்ணங்களில் அழகாக வரைந்து தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்.
மேலும், நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களிமண் கொண்டு விநாயகர் சிலைகளைத் தங்கள் கற்பனைத் திறனுக்கு ஏற்ப அழகாக வடிவமைத்தனர்.
மாணவர்களின் படைப்பாற்றலும் திறமையும் அனைவரின் பாராட்டையும் பெற்றன. மாணவர்களின் திறமையான படைப்புகளைக் கண்டு வியந்த, ஆல்பா பள்ளிக் குழுமங்களின் இயக்குநர் தனதியாகு, மாணவர்களைப் பாராட்டி, அவர்களின் கலைத்திறனை மேலும் வளர்த்துக் கொள்ள வாழ்த்துகளைத் தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி விழா மாணவர்களுக்கு ஆன்மிக உணர்வுடன் கூடிய படைப்பாற்றல் மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்தது.
