ADDED : ஆக 30, 2025 07:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உழவர்கரை தொகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்து கொண்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், 'புதுச்சேரி மாநிலத்தை சிங்கபூர் போல மாற்றி அமைக்க முடியும். அதற்காக தான் நான் தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறேன்.
இந்த மாநிலத்தில் அனைத்து வளமும் உண்டு. ஆகையால், நாம் கண்டிப்பாக நமது கனவினை நிறைவேற்றுவோம்' என்றார். இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.