/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
6 பேரிடம் ரூ.95 ஆயிரம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
/
6 பேரிடம் ரூ.95 ஆயிரம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
6 பேரிடம் ரூ.95 ஆயிரம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
6 பேரிடம் ரூ.95 ஆயிரம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
ADDED : ஏப் 27, 2025 05:32 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 6 பேரிடம் 95 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த கும்பலை, சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த ஒரு நபரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், சி.பி.ஐ., அதிகாரி பேசுவதாகவும், உங்கள் மகனை குற்ற வழக்குதொடர்பாக, வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளோம் என்றார். அதற்கு பயந்து அவர், 40 ஆயிரம் ரூபாயை அந்த நபருக்கு அனுப்பி ஏமாந்தார்.
பெண் ஒருவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம்பணம் சம்பாதிக்கலாம் என,ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி, 40 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார்.
அதே போல, மேலும், 4 பேரிடம் 15 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து, 6 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.