/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
8 பேரிடம் ரூ. 3.76 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
/
8 பேரிடம் ரூ. 3.76 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
8 பேரிடம் ரூ. 3.76 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
8 பேரிடம் ரூ. 3.76 லட்சம் 'அபேஸ்' மோசடி கும்பலுக்கு வலை
ADDED : டிச 06, 2024 04:44 AM
புதுச்சேரி : காரைக்கால் பகுதியை சேர்ந்த ஸ்ரீவித்யா என்பவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என, கூறினார்.
இதைநம்பி, ஸ்ரீவித்யா பல்வேறு தவணைகளாக 1 லட்சத்து 36 ஆயிரத்து 500 ரூபாய் வரை முதலீடு செய்தார்.
அதன் மூலம் வந்த லாப பணத்தை ஸ்ரீவித்யா எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், காரைக்கால், திருநள்ளாறு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்ட நபர் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறியதை நம்பி, ரூ. 1 லட்சத்து 23 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்தார்.
ரெயின்போ நகரை சேர்ந்த டேனியல் பிளாரன்ஸ் 35 ஆயிரம், மடுகரை விநாயகஜோதி 21 ஆயிரம், பூமியான்பேட்டை மனோஜ்குமார் 35 ஆயிரம்,வாணரப்பேட்டை கஜலட்சுமி 22 ஆயிரம், ரெயின்போ நகர் இளங்கோ 2 ஆயிரத்து400,கரியமாணிக்கம் அம்பேத்கர் சித்திக் ஆயிரத்து 430 என மொத்தம் 8 பேர் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 330 ரூபாயை இழந்தனர்.
இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.