/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் வங்கி மேலாளரை மிரட்டிய கும்பலுக்கு வலை
/
தனியார் வங்கி மேலாளரை மிரட்டிய கும்பலுக்கு வலை
ADDED : ஆக 15, 2025 03:14 AM
வில்லியனுார்: வில்லியனுார் கிழக்கு மாட வீதியில் எச்.டி.எப்.சி., தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் புதுச்சேரியை சேர்ந்த விமல், 39; மேனேஜராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் திருவண்டார்கோவில் பகுதியை சேர்ந்த விஜய் தலைமையில் சிலர் வங்கிக்கு சென்று மேலாளரிடம் எனது வங்கி கணக்கை ஏன் முடக்கி வைத்துள்ளீர்கள் என, கேட்டுள்ளார்.
அப்போது மேலாளார் விமல், உங்கள் கணக்கிற்குமேற்கு வங்கத்தில் இருந்து ரூ. 19 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் சைபர் கிரைம் போலீசார் தரப்பில் எங்கள் வங்கி தலைமைக்கு, உங்கள் வங்கி கணக்கை முடக்கிவைக்குமாறு பரிந்துரை செய்துள்ளனர்.
இதனால் தான் உங்கள் கணக்கு தற்போதுமுடக்கப்பட்டுள்ளது என, விளக்கம் அளித்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த விஜய் மற்றும் அவருடன் வந்தவர்கள் மேலாளரை ஆபாசமாக திட்டி, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர்.
மேலாளார் விமல் கொடுத்த புகாரின் பேரில், விஜய், அனுசுயாதேவி மற்றும் சிலர் மீது வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.