/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
/
கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
ADDED : நவ 23, 2025 05:33 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை, குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சேகர், 31; கஞ்சா வியாபாரியான இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 வழக்குகள் உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கஞ்சா வியாபாரியான சேகரின், போதை மற்றும் உளவியல் மருந்து பொருட்களை சட்டவிரோத கடத்தலை தடுத்திட, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட லாஸ்பேட்டை போலீசார், கலெக்டருக்கு, பரிந்துரை செய்தனர்.
அதனையேற்று, கலெக்டர் குலோத்துங்கள், ,கஞ்சா வியாபாரி சேகரை, ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திட கடந்த 20ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை, காலாப்பட்டு சிறை அதிகாரிகளிடம் நேற்று லாஸ்பேட்டை போலீசார் வழங்கினர்.

