/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திரா சிக்னல் பிரிலெப்ட்டில் இடைவெளி மூடல்
/
இந்திரா சிக்னல் பிரிலெப்ட்டில் இடைவெளி மூடல்
ADDED : அக் 18, 2024 06:35 AM

புதுச்சேரி: தினமலர் செய்தி எதிரொலியால், இந்திரா சிக்னல் ப்ரிலெப்ட் பாதையில் விடப்பட்ட இடைவெளியை போக்குவரத்து போலீசார் பேரிகார்டு மூலம் மூடினர்.
புதுச்சேரி இந்திரா சிக்னலில் டிராபிக் சிக்னல் விளக்குகள் பழுதாகி கிடப்பதால் ஏற்கனவே கடும் டிராபிக் ஜாம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கம் செல்லும் பாதையில், பிரிலெப்ட் பாதையை பிரிக்க சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. இதில், தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் சென்டர் மீடியனில் 20 அடி அகலத்திற்கு இடைவெளி விடப்பட்டது.
பூமியான்பேட்டை வரை சிக்னலில் காத்திருக்க முடியாத வாகனங்கள், பிரிலெப்ட் வழியாக வந்து மீடியன் இடைவெளியில் புகுந்து வரிசையாக நிற்கின்றனர். இதனால் பிரிலெப்ட் வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக கடந்த 9ம் தேதி தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, வடக்கு போக்குவரத்து போலீசார் பெட்ரோல் பங்க் எதிரில் விடப்பட்டு இருந்த மீடியன் இடைவெளியை பேரிகார்டு மூலம் நேற்று மூடினர். இதற்கு வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.