sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பல்மைரா கடற்கரையில் கழிவு மூட்டைகள் அகற்றம்

 பல்மைரா கடற்கரையில் கழிவு மூட்டைகள் அகற்றம்

 பல்மைரா கடற்கரையில் கழிவு மூட்டைகள் அகற்றம்


ADDED : பிப் 27, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 05:04 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரையில் கிடந்த கழிவு பொருள் மூட்டைகள், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு - மூ. புதுக்குப்பத்தில் பல்மைரா கடற்கரை உள்ளது. இந்த கடற்கரை வழியாக நேற்று காலை அப்பகுதி மீனவர்கள் சென்றுனர். அப்போது, கடற்கரை நீர்பரப்பு அருகே 10க்கும் மேற்பட்ட கழிவு பொருள் மூட்டைகள் கிடந்துள்ளது.

அருகில் சென்று பார்த்தபோது, அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. சாக்கு மூட்டைகளில் இருந்த கழிவு பொருட்கள் வெளியே சிதறிய நிலையில், கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்து வந்தனர்.

இதனால், கடற்கரை பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.

தகவலறிந்த பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, கழிவு பொருட்களை அகற்றிட நடவடிக்கை மேற்கொண்டனர். அங்கு, கிடந்த கழிவு பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us