ADDED : டிச 07, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் காலனியைச் சேர்ந்தவர் கற்பகம், 45. இவர், சில நாட்களுக்கு முன் தெருக்களில் வடமாநில வாலிபர்கள் விற்ற சிலிண்டர் அடுப்பு வாங்கினார். புதிய அடுப்பினை கற்பகம் நேற்று காலை 11:30 மணியளவில், சிலிண்டரில் இணைப்பு கொடுத்து பற்ற வைத்தார்.
திடீரென சிலிண்டர் மற்றும் அடுப்பு தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த மடுகரை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விபத்தில் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமானது.