/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆவணி அவிட்ட காயத்ரி ஜெப பாராயண ஹோமம்
/
ஆவணி அவிட்ட காயத்ரி ஜெப பாராயண ஹோமம்
ADDED : ஆக 11, 2025 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி பிராமண சேவா பவுண்டேஷன் மற்றும் ஆரிய வைசிய ஆன்மீக குழுவினர் சார்பில் 5ம் ஆண்டு ஆவணி அவிட்ட காயத்ரி ஜெப பாராயண ஹோமங்கள் நேற்று நடந்தது.
கிருஷ்ணா நகர் சின்மய சூரிய மஹாலில் நடந்த நிகழ்ச்சியில், ஏராளமான ஆன்மீக பத்கர்கள் கலந்து கொண்டு, காயத்ரி தேவியின் பரிபூரண அருளை பெற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி பிராமண சேவா பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் ஆரிய வைசிய ஆன்மீக குழுவினர்கள் செய்திருந்தனர்.
முன்னதாக, நேற்று முன்தினம் அனைத்து சமூகத்தினர்கள் கலந்து கொண்டு பூணுல் அணிந்து கொண்டனர்.