/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜெலட்டின், டெட்டேனட்டர் பதுக்கல் குவாரி உரிமையாளர் கைது
/
ஜெலட்டின், டெட்டேனட்டர் பதுக்கல் குவாரி உரிமையாளர் கைது
ஜெலட்டின், டெட்டேனட்டர் பதுக்கல் குவாரி உரிமையாளர் கைது
ஜெலட்டின், டெட்டேனட்டர் பதுக்கல் குவாரி உரிமையாளர் கைது
ADDED : செப் 28, 2024 07:01 AM

வானுார், : வானுார் அருகே அனுமதியின்றி இயங்கிய கல் குவாரியில், சக்தி வாய்ந்த வெடிபொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
வானுார் அடுத்த திருவக்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் மற்றும் கிரஷர் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் பல குவாரிகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும், வெடிபொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக புகார் நிலவியது.
அதனையொட்டி, டி.எஸ்.பி., சுனில் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் நேற்று எறையூரில் உள்ள கல் குவாரியில் சோதனை செய்தனர்.
அதில், குவாரியின் உரிமம் முடிந்த நிலையில், அதனை புதுப்பிக்காமல், அருகில் உள்ள புறம்போக்கு இடத்தில் தோண்டியதும், இதற்காக அனுமதியின்றி 231 ஜெலட்டின் குச்சிகளும், 60 டெட்டேனட்டர்களும் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, குவாரி உரிமையாளரான எறையூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சந்துரு மகன் செந்தில், 38; என்பவரை கைது செய்தனர்.
மேலும், குவாரியில் இருந்த டிராக்டர், ஜெலட்டின் குச்சிகள், டெட்டேனட்டர்களை பறிமுதல் செய்தனர்.