/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் ராணுவவீரர்கள் நலச்சங்க பொதுக்குழு
/
முன்னாள் ராணுவவீரர்கள் நலச்சங்க பொதுக்குழு
ADDED : நவ 11, 2024 07:37 AM

புதுச்சேரி : புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்தின் 19வது பொதுக்குழு கூட்டம், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
லாஸ்பேட்டை விவேகானந்தா கல்வி வளாகத்தில் நடந்த கூட்டத்தில் புதுச்சேரி முன்னாள் ராணுவவீரர்கள் நலச்சங்கத்தின் தலைவர்கள் சந்திரகுமரன், மகாதேவன் ஆகியோர் பங்கேற்று, பேசினர்.
நலச்சங்க தலைவர் பெருமாள், மூத்த துணை தலைவர் ஜோதிகுமார், துணைத் தலைவர் பரமசிவம், பொது செயலாளர் தேவராஜீ ஆகியோர் சங்கத்தின் செயல்பாடுகள், எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினர்.
இதில், நலச்சங்கத்தின் அலுவலகத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றி வரும் கில்பர்ட், இளங்கோ, யுவன்நேரு, கணேஷ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, நலச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரியாக பாலதண்டாயுதம், தேர்தல் உதவியாளர்களாக கில்பர்ட், இளங்கோ ஆகியோர் செயல்பட்டு, நலச்சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.
பொதுக்குழு மற்றும் தேர்தல்பணிகளை செயலாளர் பாலையா, மக்கள் தொடர்பாளர் தனுசு, பொருளாளர் ரவிச்சந்திரன், குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
கூட்டத்தில், குப்பன், அரிபுத்திரன், கோவிந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, துளசிதாஸ் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.