பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவை கூட்டம்
பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவை கூட்டம்
ADDED : ஜன 05, 2026 04:26 AM

புதுச்சேரி: புதுச்சேரி பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தின், 68வது பொதுப் பேரவைக் கூட்டம் நேற்று நடந்தது.
தட்டாஞ்சாவடி, வி.வி.பி., நகரில், புதுச்சேரி பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1956ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி துவங்கப்பட்ட இச்சங்கத்தில் தற்போது 5,017 அரசு ஊழியர்களை உறுப்பினர்களாக கொண்டு, செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின், 68வது பொதுப் பேரவைக் கூட்டம், குயவர்பாளையம், லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மகாலில் நடந்தது.
கூட்டத்தில், சங்க இயக்குனர் மணிகண்டன் வரவேற்று, பொதுப் பேரவைக் கூட்டத்தை துவக்கி வைத்தார். சங்கத்தின் தலைவர் பிரபாகரன் சங்கத்தின் ஆண்டறிக்கை வாசித்து, 2024- 25ம் ஆண்டுக்கான லாபப் பிரிவினை, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2025-26ம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்டம், மற்றும் சங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் தொடர்பாக விளக்க உரையாற்றினார்.
கூட்டத்தில், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் குப்புராமன், இயக்குநர்கள் மருதாசலம், இளங்கோவன், கணேஷ், பெருமாள், லட்சுமணன், பூவரசன், வசந்தராஜன் மற்றும் புஷ்பசந்துரு ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
