/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'வாசிக்கும் தன்மையை நேசிக்கும் தலைமுறை': விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
'வாசிக்கும் தன்மையை நேசிக்கும் தலைமுறை': விழிப்புணர்வு நிகழ்ச்சி
'வாசிக்கும் தன்மையை நேசிக்கும் தலைமுறை': விழிப்புணர்வு நிகழ்ச்சி
'வாசிக்கும் தன்மையை நேசிக்கும் தலைமுறை': விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 09, 2024 07:21 AM

புதுச்சேரி : புதுச்சேரி, பெத்து செட்டிப்பேட்டை துரைசாமி அரசு உயர்நிலைப் பள்ளியில் வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இயக்கம் சார்பில் 'வாசிக்கும் தன்மையை நேசிக்கும் தலைமுறை' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்மொழி வரவேற்றார். நிகழ்ச்சியில், கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் கலியபெருமாள் பங்கேற்று, மாணவர்களுக்கு நுாலக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.
இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கலைவரதன் விழிப்புணர்வு உரையாற்றினார்.
செயலாளர் கலைவாணி கணேசன், இளங்குயில் பத்மநாபன், புவனா, காஞ்சனா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
ஆசிரியர்கள் கமலா, வனிதா, சக்தி சிவரூபினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.