நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேதராப்பட்டு திடீர் நகரைச் சேர்ந்தவர் பகவதி 21, இவர் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தனியார் கம்பெனி ஊழியர்.
இவரது பெற்றோர்கள் நேற்று முன்தினம் காலை உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். பின் பகவதி மற்றும் அவரது சகோதரி ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு திடீரென பகவதி காணவில்லை. இவரை உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

