/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜெர்மனி - தட்சசீலா பல்கலைகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
ஜெர்மனி - தட்சசீலா பல்கலைகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜெர்மனி - தட்சசீலா பல்கலைகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜெர்மனி - தட்சசீலா பல்கலைகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : பிப் 22, 2024 06:43 AM

புதுச்சேரி: திண்டிவனம் தட்சசீலா பல்கலைக்கழகம் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர் நேஷனல் பிசினஸ் யுனிவர்சிட்டி, ஜெர்மனி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தட்சசீலா பல்கலைக் கழகமானது வளர்ந்து வரும் கல்விச் சூழலுக்கு ஏற்ப உயர் கல்வியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, கலை மற்றும் அறிவியல், பொறியியல், விவசாயம், சுகாதார அறிவியல், உடற்சிகிச்சை, ஸ்கூல் ஆப் பார்மசி மற்றும் ஸ்கூல் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்றவைகள் பல்வேறு தொழில் நுட்ப நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு இயங்கி வருகின்றன.
அவ்வகையில், தட்சசீலா பல்கலைக்கழகம் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர் நேஷனல் பிசினஸ் ரிலேஷன் யுனிவர்சிட்டி, ஜெர்மனி (ஐ.பி.ஆர்.யு) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி தட்சசீலா பல்கலைக் கழக மாணவர்கள் ஜெர்மனியில் உள்ள ஐ.பி.ஆர்.யு., பல்கலைக் கழகத்திற்கு சென்றும், ஐ.பி.ஆர்.யு., மாணவர்கள் தட்சசீலா பல்கலைக்கழகத்திற்கு வந்தும் படிக்கலாம். மேலாண்மைக் கல்வி தொடர்பான தொழில் நுட்பங்களையும் பரிமாறிக் கொள்ளலாம்.
பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் தட்சசீலா பல்கலைக் கழகத்தின் வேந்தர் தனசேகரன், இணை வேந்தர் நிலா பிரியதர்ஷினி, துணை வேந்தர் விவேக் இந்தர் கோச்சர் முன்னிலையில் பதிவாளர் செந்தில் மற்றும் ஐ.பி.ஆர்.யு.,வின் இந்தியப் பிரதிநிதி தாமரை பாண்டியன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பல்கலையின் துணை பதிவாளர் ராமலிங்கம், தொழில்நுட்ப அறிவியல் துறையின் டீன் சுப்ரமணியன், கலை மற்றும் அறிவியல் துறையின் டீன் தீபா மற்றும் பேராசிரியர்கள் மற்றும் சென்னை கன்சல்டண்ட் இக்னீசியஸ் ராபீல் ஆகியோர் உடனிருந்தனர்.