sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் கர்ப்பகால நீரிழிவு விழிப்புணர்வு

/

எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் கர்ப்பகால நீரிழிவு விழிப்புணர்வு

எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் கர்ப்பகால நீரிழிவு விழிப்புணர்வு

எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் கர்ப்பகால நீரிழிவு விழிப்புணர்வு


ADDED : மார் 11, 2026 04:57 AM

Google News

ADDED : மார் 11, 2026 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் தேசிய கர்ப்பகால நீரிழிவு தினதை்தையொட்டி, பொது மக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

மருத்துவமனையின் நிறுவனரும், நீரிழிவு நிபுணர் எம்.ஆர்.வித்யா கூறுகையில், இளம் பெண்கள் தாய்மை அடையும் போது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுதல்கள், உடல் எடை அதிக அளவில் அதிகரிப்பது, அதிகமாக மாவுசத்து நிறைந்த உணவுகளை வளரும் சிசுவுக்கும் சேர்த்து உண்ண வேண்டும் என்ற தவறான புரிதலில் சாப்பிடுவது, உடற்பயிற்சி இல்லாதது, இன்சுலின் எதிர்ப்புத்தன்மை, போன்ற பல காரணங்களால் கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

வருங்கால சந்ததியனர் நீரிழிவு நோயில் இருந்து விடுபட வேண்டும் என்றால், தற்போதைய இளம் தலைமுறை பெண்கள் பள்ளிப்பருவத்தில், கல்லுாரி படிப்பில், திருமண வயதில் உள்ள இளம் பெண்கள் வருடம் ஒருமுறை ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொண்டு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஆரம்பத்திலேயே கர்ப்பகால சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கு, எம்.வி.ஆர். மருத்துவ மையத்தின் 15ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, மையத்தில் 30 சதவீத கட்டண சலுகையில் அனைத்து சிறப்பு பரிசோதனை தொகுப்புகளும் செய்யப்படுகிறது. வரும் 31ம் தேதி வரை கர்ப்பமுற்ற மகளிருக்கு சர்க்கரை நோய் குறித்த இலவச மருத்துவ ஆலோசனை, ரத்த பரிசோதனை, உணவு குறித்த ஆலோசனை மருத்துவ மனையில் வழங்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us