/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'குளு குளு' ஸ்டால்களில் 'ஷாப்பிங்' செய்ய குடும்ப தலைவிகளே ரெடியாகுங்க!

UPDATED : ஆக 05, 2025 10:26 AM
ADDED : ஆக 05, 2025 02:27 AM

புதுச்சேரி: புதுச்சேரி, உப்பளம் துறைமுகம் வளாகத்தில், தினமலர் நாளிதழ் மற்றும் டார்லிங் இணைந்து, வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை வரும் 8ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரையில் நடத்துகிறது.
கண்காட்சியில் மங்கையர் மனங்கவரும் அழகு சாதன பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், அனைத்து தரப்பினரையும் வசீகரிக்கும் விதவிதமான உணவு வகைகள் என, அசத்தலான அரங்குகள் தயாராகி வருகின்றன.
ஒரே இடத்தில் அனைத்து விதமான பொருட்களையும், குடும்பத்துடன் குதுாகலமாக ஷாப்பிங் செய்து விரும்பியதை வாங்கும் அரிய வாய்ப்பு, இந்த கண்காட்சி மூலம் ஆண்டிற்கு ஒருமுறை தான் கிடைக்கும்.
அதிரடி சலுகை விலையில், உங்கள் இல்லத்திற்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களான பர்னிச்சர்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், பரிசு பொருட்கள், அலங்கார பொருள், அழகு சாதனங்கள் என, அனைத்து வகை பொருட்களின் அரங்குகள் வரிசை கட்டி நிற்கின்றன.குடும்பத் தலைவிகளே 'குளு குளு' ஸ்டால்களில் ஷாப்பிங் செய்து மகிழ இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது காத்திருங்கள்.