/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தண்ணீரில் மூழ்கி பெண் குழந்தை பலி
/
தண்ணீரில் மூழ்கி பெண் குழந்தை பலி
ADDED : பிப் 10, 2024 06:22 AM
காரைக்கால்: காரைக்காலில் பாத்ரூம் பிளாஸ்டிக் டப் தண்ணீரில் மூழ்கி பெண் குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் எம்.எம்.ஜி., நகரை சேர்ந்தவர் கமலகண்ணன்; ஆன்லைன் டெலிவரி கம்பெனி மேலாளர். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஸ்ரீநிதி, 2, என்ற பெண் குழந்தை இருந்தார்.
நேற்று முன்தினம் ரேவதி சமையல் செய்துகொண்டிருந்த போது, வீட்டில் விளையாடிய ஸ்ரீநிதி பாத்ரூமில் தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் டப்பில் தடுமாறி விழுந்தார்.
தண்ணீரில் மூழ்கி மயங்கிய அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்ததை உறுதி செய்தார்.
புகாரின்பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.