தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சிறுமி கொலை வழக்கு: புதுச்சேரி கவர்னர் அவசர ஆலோசனை

சிறுமி கொலை வழக்கு: புதுச்சேரி கவர்னர் அவசர ஆலோசனை

சிறுமி கொலை வழக்கு: புதுச்சேரி கவர்னர் அவசர ஆலோசனை


ADDED : மார் 07, 2024 10:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2024 10:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். சிறுமி படுகொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்து, டிஜிபி, டிஐஜி ஆகியோருடன் கவர்னர் தமிழிசை அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 2ம் தேதி வீட்டின் அருகே விளையாடிய போது மாயமானார். முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து தேடினர். இதையடுத்து சிறுமி மாயமான வீட்டில் இருந்து, 100 மீட்டர் துாரத்தில் உள்ள வாய்க்காலில் கடும் துர்நாற்றம் வீசியது. போலீசார் பார்த்தபோது, மாயமான சிறுமி கொலை செய்யப்பட்டு, கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு, உடல் வேட்டியால் சுற்றப்பட்டு, வாய்க்காலில் வீசப்பட்டிருந்தார்.

அதை அறிந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். சிறுமியின் உடல், ஜிப்மரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, சிறுமி மாயமான வழக்கு, 'போக்சோ' மற்றும் கொலை வழக்காக மாற்றப்பட்டு, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். சிறுமி உடல் அருகில் புத்தகப்பை, விளையாட்டுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.

அவசர ஆலோசனை

சிறுமி படுகொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்து, டிஜிபி, டிஐஜி ஆகியோருடன் கவர்னர் தமிழிசை அவசர ஆலோசனை மேற்கொண்டார். முத்தியால் பேட்டை, சோலைநகர் உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us