வளர்ச்சி திட்டங்கள் தொடர வாய்ப்பு தாருங்கள் உழவர்கரையில் காங்., வேட்பாளர் பிரசாரம்
வளர்ச்சி திட்டங்கள் தொடர வாய்ப்பு தாருங்கள் உழவர்கரையில் காங்., வேட்பாளர் பிரசாரம்
ADDED : ஏப் 01, 2026 05:07 AM

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில், கடந்த 5 ஆண்டுகளில், செய்து முடித்த வளர்ச்சி திட்டங்கள் தொடர வாய்ப்பு தருமாறு காங்., வேட்பாளர் சிவசங்கர் ஓட்டு சேகரித்தார்.
உழவர்கரை தொகுதியில் காங்., சார்பில் போட்டியிடும் சிவசங்கர் நேற்று ஜே.ஜே. நகர், அன்னை தெரசா நகர், சரஸ்வதி நகர் ஆகிய பகுதியில் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு ஓட்டுகளை சேகரித்தார்.
அப்போது, அவர், கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ., வாக, உழவர்கரை தொகுதியில் சாலைகள் மேம்பாடு, புதிய சாலைகள் அமைத்தல், குடிநீர் வசதி, தெரு விளக்குகள் என ரூ. 165 கோடிக்கு மேலான வளர்ச்சிப் பணிகளை செய்து, முன்மாதிரியாக மாற்றி உள்ளேன். சுமார், 2,000 மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளை, சிகப்பு நிற கார்டாக மாற்றி கொடுத்துள்ளேன்.
மத்திய அரசு நிதியை பெற்று புதிதாக ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையம் கட்டப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியிலிருந்து பாவாணர் நகர் முழுவதும் வாய்க்கால் அமைத்து தரப்பட்டது. இந்த வளர்ச்சி திட்டங்கள் தொடர கை சின்னத்திற்கு ஓட்டுகள் போட்டு என்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
