ADDED : ஏப் 03, 2026 05:37 AM

புதுச்சேரி: த.வெ.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் நேயம் மக்கள் கழக வேட்பாளர் நேரு உருளையன்பேட்டை தொகுதியில் ஓட்டு சேகரித்தார்.
அவர் உருளையன்பேட் டை தொகுதிக்கு உட்பட்ட நேரு வீதி, தியாகு முதலியார் வீதி, ரங்கப்பிள்ளை வீதி, சண்முக வேலாயுத முதலியார் வீதி, நீடராஜப்பயர் வீதி, குளத்துமேடு வீதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
இந்த பகுதியில் புதிய சிமென்ட் சாலை அமைக்கபட்டுள்ளது. குளத்து மேடு வீதியில் புதிய பாதாள சாக்கடை கழிவு நீர் தொட்டிகள் அமைத்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டது. புதிய மின்மாற்றி மூலம் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நலப்பணித் திட்டங்கள் தொடர வாய்ப்பு அளியுங்கள் என, கேட்டார்.
ஓட்டு சேகரிப்பின் போது, த.வெ.க., மற்றும் நேயம் மக்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
