/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
ஜி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : பிப் 03, 2025 06:28 AM

வில்லியனுார்: வில்லியனுார் குருவப்ப நாயக்கன் பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
வில்லியனுார் குருவப்ப நாயக்கன் பாளையத்தில் (ஜி.என். பாளையம்) உள்ள பழமை வாய்ந்த செல்லமுத்து மாரியம்மன் கோவில் ரூ. 1 கோடி செலவில் புணரமைத்து நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.
விழா கடந்த 31ம் தேதி கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், கோ பூஜை, விக்னேஸ்வர பூஜைகளுடன் துவங்கியது.
காலை 11.00 மணியளவில் மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள், முதல் யாகசாலை பூஜைகளை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது.
நேற்று அதிகாலை நான்காம் யாகசாலை பூஜைகள் நடந்தது.
காலை 9:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடாகி, காலை 10:00 மணிக்கு விமான கும்பாபிேஷகமும், 10:15 மணியளவில் மூலவர் மகா கும்பாபி ேஷகமும் தீபாராதனையும் நடந்தது.
இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவில்எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திருப்பணி கமிட்டி தலைவர் ராமசாமி, கோவில் நிர்வாக அதிகாரி அன்பழகன், உறுப்பினர் காத்தவராயன், ஐயப்பன், பிரபா கரன், சீனிவாசன், ஜெகதீசன், புளு ஸ்டார் பள்ளி நிர்வாகி மெய்வழி ரவிக்குமார், கஜேந்திரன், தி.மு.க., குமாரவேல் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.