/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கோவிலில் கோ பூஜை: கவர்னர் பங்கேற்பு
/
மணக்குள விநாயகர் கோவிலில் கோ பூஜை: கவர்னர் பங்கேற்பு
மணக்குள விநாயகர் கோவிலில் கோ பூஜை: கவர்னர் பங்கேற்பு
மணக்குள விநாயகர் கோவிலில் கோ பூஜை: கவர்னர் பங்கேற்பு
ADDED : ஏப் 09, 2025 03:48 AM

புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவில், 10ம் ஆண்டு கும்பாபிேஷக துவக்க விழாவையொட்டி, நடந்த கோ பூஜையில், கவர்னர் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் 10ம் ஆண்டு கும்பாபிேஷக துவக்க விழா, கணபதி பூஜையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியான, நேற்று காலை 8:00 மணியளவில், கோவில் வளாகத்தில் 27 நட்சத்திரங்களுக்கு கன்றுகளுடன் 27 பசுக்களுக்கு கோ பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, விநாயகருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
இன்று காலை 6:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை, லட்சார்ச்சனை, நாளை 1,008 சங்காபிேஷகம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நிர்வாக அதிகாரி பழனியப்பன், சிவாச்சாரியார்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.