/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பு பயிற்சி
/
இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பு பயிற்சி
ADDED : அக் 15, 2025 11:05 PM
புதுச்சேரி: புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலையத்தில் ஆடு வளர்ப்பு பயிற்சி பெற இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் வழி காட்டுதலின்படி 18 முதல் 35 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்கள் விவசாயத்தில் ஆர்வம் ஏற்படுத்தி அதை தக்கவைக்கும் பொருட்டு ஆர்யா திட்டத்தின் திறன் வளர்க்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பயிற்சிக்கு பிறகு அதனைச் சார்ந்த சுய தொழில் தொடங்கவும், தேவையான உபகரணங்களை மற்றும் உள்ளீட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது.
இதன்படி இந்தாண்டு ஆர்யா திட்டத்தின் கீழ் வேளாண் அறிவியல் நிலையத்தில் இயங்கும் கால்நடை பிரிவில், ஆடு வளர்ப்பு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்பயிற்சி பெற புதுச்சேரியை சேர்ந்தவராகவும், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வேறு எந்த ஆர்யா திட்டத்திலும் பயனடையாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள், தங்களுடைய ஆதார் அட்டை நகலுடன் இந்நிலையத்தை தொடர்பு கொண்டு பயிற்சி விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, வரும் 24ம் தேதி மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
மேலும் இது தொடர்பான தகவலுக்கு பயிற்சி அதிகாரி டாக்டர் சித்ரா, தொழில்நுட்ப வல்லுநர் (கால்நடை பராமரிப்பு ) 94890 52304, 0413-2271292, 2279758 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.