/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தங்கத்தின் மூலம் பல் அடைத்தல் செயல்முறை கருத்தரங்கு
/
தங்கத்தின் மூலம் பல் அடைத்தல் செயல்முறை கருத்தரங்கு
தங்கத்தின் மூலம் பல் அடைத்தல் செயல்முறை கருத்தரங்கு
தங்கத்தின் மூலம் பல் அடைத்தல் செயல்முறை கருத்தரங்கு
ADDED : ஆக 12, 2025 02:54 AM

புதுச்சேரி: கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்தில் பல் பாதுகாப்பு மற்றும் வேர் சிகிச்சை பிரிவு சார்பில் 'தங்கத்தின் மூலம் பல் அடைத்தல்' தலைப்பில் 2 நாள் செயல்முறை கருத்தரங்கம் நேற்று துவங்கியது.
கல்லுாரி முதல்வர் கென்னடிபாபு தலைமை தாங்கி கருத்தரங்கை துவக்கி வைத்தார். துறைத் தலைவர் பிகாஷ் ஜோதி பொர்த்தாக்கூர் வரவேற்றார்.
கருத்தரங்கில் லக்னோ, கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர்கள் பிரமிளா வர்மா, ரிதம் ஆகியோர் பங்கேற்று துாய தங்கத்தின் மூலம் பல் அடைத்தல் தொடர்பான செயல்முறை விளக்கம் அளித்தனர்.
ஏற்பாடுகளை பேராசிரியர் சுவாதிகா, இணை பேராசிரியர் பிரேம்குமார் ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியர் கணேசன் நன்றி கூறினார்.
கருத்தரங்கில், பல்வேறு பல் மருத்துவக் கல்லுாரியின் பேராசிரியர்கள், முதுநிலை மற்றும் இளநிலை பல் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.