/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமன்வெல்த் போட்டி சீனியர் எஸ்.பி.,க்கு தங்கம்
/
காமன்வெல்த் போட்டி சீனியர் எஸ்.பி.,க்கு தங்கம்
ADDED : அக் 06, 2024 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தென்னாபிரிக்காவில் நடக்கும் காமன்வெல்த் பளுதுாக்கும் போட்டியில் புதுச்சேரி சீனியர் எஸ்.பி., அனிதா ராய், தங்கப் பதக்கம் வென்றார்.
புதுச்சேரியில் போலீசில் சீனியர் எஸ்.பி.,யாக பணியாற்றி வருபவர் அனிதா ராய். பளுதுாக்கும் வீரங்கனையான இவர், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்று வருகிறார்.
தென்னாபிரிக்காவில் கடந்த 4ம் தேதி துவங்கி 13ம் தேதி வரை நடக்கும் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டார். இதில், பளுதுாக்கும் போட்டியின், 63 கிலோ பிரிவில் பங்கேற்ற சீனியர் எஸ்.பி., அனிதா ராய், தங்கப் பதக்கம் வென்றார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.