/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடியரசு தின பாசறையில் தங்கம்: புதுச்சேரி மாணவருக்கு பாராட்டு
/
குடியரசு தின பாசறையில் தங்கம்: புதுச்சேரி மாணவருக்கு பாராட்டு
குடியரசு தின பாசறையில் தங்கம்: புதுச்சேரி மாணவருக்கு பாராட்டு
குடியரசு தின பாசறையில் தங்கம்: புதுச்சேரி மாணவருக்கு பாராட்டு
ADDED : பிப் 14, 2026 04:33 AM

புதுச்சேரி: டில்லியில் என்.சி.சி., பொது இயக்குனரகம் சார்பில், குடியரசு தின பாசறை முகாம் நடந்தது.
முகாமில் பங்கேற்ற அமலோற்பவம் லுார்து அகாதமியின் என்.சி.சி., மாணவர் பிரின்ஸ் டார்வின், ஜூனியர் பிரிவு நடனப் போட்டியில் பங்கேற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பல்சுவை கூட்டு நடனத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய மாணவர், பிரதமர் முன்னிலையில் நடந்த அணிவகுப்பு மரியாதையில் சிறப்பாக செயலாற்றி, அதிகாரிகள் மற்றும் சக குழுவினரின் பாராட்டுகளை யும் பெற்றார்.
பதக்கங்களை வென்று அமலோற்பவ லுார்து அகாடமிக்கு பெருமை சேர்ந்த மாணவர் பிரின்ஸ் டார்வினை, பள்ளியின் முதுநிலை முதல்வர் லுார்து சாமி பாராட்டினார். தொடர்ந்து வாழ்வில் பல சாதனைகளை படைத்து, வளமான வருங்காலம் அமைய வேண்டி மாணவரை ஆசீர்வதித்தார்.