மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு
மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு
ADDED : ஏப் 15, 2026 10:33 PM

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் பா.ஜ., சார்பில் மாநில பொறுபாளர் நிர்மல்குமார் சுரானா உடல் நலம் பெற வேண்டிய தங்கத் தேர் இழுந்து வழிபாடு நடத்தினர்.
புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில், மணக்குள விநாயகர் கோவிலில், மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா விரைவில் உடல் நலம் பெற வேண்டியும், மாநிலத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நேற்று நடந்தது.
மாநில தலைவர் ராமலிங்கம் தலைமையில் நிர்வாகிகள் தங்கத் தேரை இழுத்து வழிபாடு நடத்தினர்.
நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான் குமார், தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், துணைத் தலைவர்கள் ரத்தினவேலு, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், அகிலன், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொகுதி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
