sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் 21 பேருக்கு நல்லாசிரியர் விருது... அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை பட்டியல் வெளியீடு

/

புதுச்சேரியில் 21 பேருக்கு நல்லாசிரியர் விருது... அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் 21 பேருக்கு நல்லாசிரியர் விருது... அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் 21 பேருக்கு நல்லாசிரியர் விருது... அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை பட்டியல் வெளியீடு


ADDED : செப் 04, 2024 07:46 AM

Google News

ADDED : செப் 04, 2024 07:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் கல்வி பணி சாதனைகளை பாராட்டியும் ஆண்டுதோறும் 4 பேருக்கு, ராதாகிருஷ்ணன் விருதும், 7 பேருக்கு முதல்வரின் சிறப்பு விருதும், 10 பேருக்கு கல்வி அமைச்சரின் வட்டார விருதும், ஆசிரியர் தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தாண்டிற்கான நல்லாசிரியர் விருது பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் விருது


லாஸ்பேட்டை, அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவி; காரைக்கால், கோட்டுச்சேரி, அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கில்பர்ட் செரியன்; குருசுக்குப்பம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விலங்கியல் விரிவுரையாளர் விஜயன்; பி.எஸ் பாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளி கணித விரிவுரையாளர் சார்லஸ் பால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதல்வர் சிறப்பு விருது


மொழி பிரிவில், புதுச்சேரி, திருவள்ளுவர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் விரிவுரையாளர் கலைவாணி; பெண்கள் பிரிவில், காராமணிக்குப்பம், ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, தாவரவியல் விரிவுரையாளர் சித்ரா; புதுச்சேரி, சுசிலாபாய் அரசு ஆரம்பப்பள்ளி, ஜெகதீஸ்வரி; முருங்கப்பாக்கம், அரசு ஆரம்பப்பள்ளி ேஹமலதா; புதுச்சேரி, சவராயலு நாயகர் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கஜலட்சுமி; பாக்குமுடையான்பட்டு, அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் நளினி தேவி; தொழில்நுட்ப பிரிவில், முத்திரையர்பாளையம், இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி இளமுருகன்; ஆகியோர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

கல்வி அமைச்சர் வட்டார விருது


அதேபோல வில்லியனுார், விவேகானந்தா அரசு மேல்நிலைப்பள்ளி வேதியியல் விரிவுரையாளர் முரளி; முருங்கப்பாக்கம், தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப்பள்ளி இயற்பியல் விரிவுரையாளர் திருஞான சம்மந்தம்; தவளக்குப்பம், அரசுமேல்நிலைப்பள்ளி வேதியியல் விரிவுரையாளர் திருநாராயணன்; கொம்பாக்கம், அரசுப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ஜமுனா; புதுச்சேரி, திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கணபதி விவேகானந்தன்; ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சோலைநகர், அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி; காரைக்கால், அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வணிகவியல் விரிவுரையாளர் ராஜகோபாலன்; காரைக்கால், தென்னுார், பா.சண்முகம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சத்தியா; மாகி, ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி தாவரவியல் விரிவுரையாளர் கிரிஜா; ஏனாம், இந்திராகாந்தி அரசு பெண்கள் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆச்சார்யலு ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.






      Dinamalar
      Follow us