ADDED : ஏப் 03, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, திப்புராயப்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 21. ரவுடியான இவர் மீது, ஒரு கொலை, அடிதடி உட்பட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
தற்போது காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் மூலம் சட்டசபை தேர்தலில் பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஓதியஞ்சாலை போலீசார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
அதன் பேரில், ஸ்ரீகாந்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான உத்தரவை போலீசார், காலாப்பட்டு சிறை அதிகாரிகளிடம் நேற்று வழங்கினர்.
