/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் கோதண்டராமர் கோவிலில் கவர்னர் தமிழிசை துாய்மை பணி
/
பாகூர் கோதண்டராமர் கோவிலில் கவர்னர் தமிழிசை துாய்மை பணி
பாகூர் கோதண்டராமர் கோவிலில் கவர்னர் தமிழிசை துாய்மை பணி
பாகூர் கோதண்டராமர் கோவிலில் கவர்னர் தமிழிசை துாய்மை பணி
ADDED : ஜன 22, 2024 06:17 AM

பாகூர் : அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இதனை முன்னிட்டு நாடு முழுதும் உள்ள கோவில்களில் துாய்மை பணி மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
அதன்படி, கவர்னர் தமிழிசை பாகூரில் உள்ள பழமை வாய்ந்த கோதண்ட ராமர் கோவிலுக்கு நேற்று பிற்பகல் வந்தார்.
பின், கோதண்டராமர் சீதை, பூதேவி, ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கவர்னர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின், கோவில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவு தொழிலாளர்களிடம் குறைகளை கேட்றிந்தார்.
இந்து அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், அர்ச்சகர்கள் சங்கர், பாபு, நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.