ADDED : டிச 13, 2024 05:57 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு செலுத்தும் வெள்ள நிவாரண நிதியினை பிடித்தம் செய்யும் வங்கி மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுச்சேரியில் பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிப்படைந்தனர்.
இதையடுத்து புதுச்சேரி அரசு அனைத்து ரேஷன் கார்டுக்கு 5,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவித்தது. நிவாரணத் தொகை நேற்று முதல் வங்கி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் நிவாரண தொகையினை, வங்கி பயணாளிகளின் நிலுவையில் உள்ள பழைய கணக்கில் வரவு வைக்ககூடாது என நீதிமன்றம் உத்தரவு உள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி அரசு செலுத்திய நிவாரணத் தொகையினை சில வங்கிகள் பயனாளிகளின் கல்விக்கடன் உள்ளிட்ட பழைய நிலுவை தொகையினை பிடித்தம் செய்வதாக கவர்னர், முதல்வர் ஆகியோர்களுக்கு புகார் அனுப்பபட்டுள்ளது.
அந்த புகாரின் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
