/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாசிக் நிறுவனம் மூடப்படும் அரசு அறிவிப்புக்கு கண்டனம்
/
பாசிக் நிறுவனம் மூடப்படும் அரசு அறிவிப்புக்கு கண்டனம்
பாசிக் நிறுவனம் மூடப்படும் அரசு அறிவிப்புக்கு கண்டனம்
பாசிக் நிறுவனம் மூடப்படும் அரசு அறிவிப்புக்கு கண்டனம்
ADDED : அக் 16, 2025 02:22 AM
புதுச்சேரி: பாசிக் நிறுவனம் மூடப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு, ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் அறிக்கை:
பாசிக் நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்து, உழவு கருவிகள் வழங்கப்பட்டு வந்தன. சிறப்பாக செயல்பட்டு வந்த இந்நிறுவனத்துக்கு சம்பந்தமில்லாத மதுபானக் கடை, மரம் விற்பனைக் கூடம் மற்றும் துணிக் கடை போன்றவைகள் துவங்கப்பட்டன. பின், வாரிய தலைவர்களை நியமித்து, அதிக ஆட்களை பணி அமர்த்தி, நிர்வாக திறமையின்மை காரணத்தால், நிதியை செலவழித்து வந்தனர்.
நஷ்டம் ஏற்பட்டு நலிவடைந்த நிலையில், 500 ஊழியர்களுக்கு, 170 மாத சம்பளம் வழங்கவில்லை. இந்நிலையில், பாசிக் நிறுவனத்தை மூடுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதனை, ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கம் கண்டிக்கிறது.
பாசிக் நிறுவனத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 38 கோடி ரூபாயை கொண்டு, ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்கிட வேண்டும்.