ADDED : ஜன 14, 2025 06:21 AM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகை ஆணையை, சபாநாயகர் செல்வம், பயனாளிகளுக்கு வழங்கினார்.
குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை மூலம், விதவை, முதியோர், கணவரால் கைவிடப்பட்டோருக்கான, மாதாந்திர உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி, தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், சபாநாயகர் செல்வம், மணவெளி தொகுதியை சேர்ந்த, 170 பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணையை, பயனாளி களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் லட்சுமிகாந்தன், விவசாய அணி தலைவர் ராமு, பா.ஜ., பிரமுகர்கள், ஞானசேகரன், சுகுமாறன், கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல், குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
