தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏம்பலத்தில் அரசு கல்லுாரி என்.ஆர்.காங்., வேட்பாளர் உறுதி

 ஏம்பலத்தில் அரசு கல்லுாரி என்.ஆர்.காங்., வேட்பாளர் உறுதி

 ஏம்பலத்தில் அரசு கல்லுாரி என்.ஆர்.காங்., வேட்பாளர் உறுதி


ADDED : மார் 29, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 04:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:ஏம்பலத்தில் என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

ஏம்பலம் (தனி) தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் வீடு வீடாக சென்று ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார். நேற்று ஏம்பலம் கிராமத்தில் ஓட்டு சேகரித்தார். அப்போது, வேட்பாளரை அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

வாக்காளர் மத்தியில் வேட்பாளர் மோகன்தாஸ் பேசுகையில், 'வ ளர்ந்து வரும் கிராமமான ஏம்பலத்தில் உள்ள குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தரப்படும். புதிய நகர்களுக்கு சாலை மற்றும் உள்கட்டமைப்பு ஏற்படுத்தி தருவேன். மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் அரசிடம் இருந்து பெற்று தரப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன். நலத்திட்ட உதவிகள் வீடு தேடி வர ஏற்பாடு செய்வேன்.

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து குறைகளை தீர்த்து வைப்பேன். ஏம்பலம் பகுதியில் அரசு கல்லுாரி, பாலிடெக்னிக் கொண்டு வருவேன். விவசாயிகளுக்கு, டி.வி.நகர் பகுதியில் உழவர் உதவியகம் கொண்டு வரவும், குடிமைப் பொருள் வழங்கல் துறை கிளை அலுவலகத்தை மீண்டும் இப்பகுதிக்கு கொண்டு வருவேன்' என்றார்.

அப்போது, என்.ஆர்.காங்., தொகுதி தலைவர் ராதாகிருஷ்ணன், பா.ஜ., நிர்வாகிகள் அங்குதாஸ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us