/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு கல்லுாரி பேராசிரியர்கள் 14வது நாளாக போராட்டம்
/
அரசு கல்லுாரி பேராசிரியர்கள் 14வது நாளாக போராட்டம்
அரசு கல்லுாரி பேராசிரியர்கள் 14வது நாளாக போராட்டம்
அரசு கல்லுாரி பேராசிரியர்கள் 14வது நாளாக போராட்டம்
ADDED : நவ 19, 2025 08:08 AM

புதுச்சேரி: பதவி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் அரசு கல்லுாரி பேராசிரியர்களின் போராட்டம் 14ம் நாளாக நேற்றும் நீடித்தது.
மாநிலத்தில் உள்ள 7 அரசு கல்லுாரிகளில் 200க் கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 15 ஆண்டாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
முதல்வர், கல்வி அமைச்சரை சந்தித்து முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
அதனைத் தொடர்ந்து கடந்த 5ம் தேதி முதல் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி பாதிக்காத வகையில், காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் 14ம் நாளாக நேற்று கொட்டும் மழையிலும் தொடர்ந்தது.
இருப்பினும், அரசு பேராசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.