sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு போட்டித்தேர்வு பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

அரசு போட்டித்தேர்வு பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

அரசு போட்டித்தேர்வு பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஜூன் 04, 2025 01:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2025 01:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இலவச அரசு போட்டித்தேர்வு, கணினி மென்பொருள் மற்றும் கணினி வன்பொருள் தேசிய சான்தழ்களுடன் கூடிய ஓராண்டு பயிற்சி வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துணை பிராந்திய வேலை வாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி செய்திக்குறிப்பு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவை சேர்ந்த அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு ஓராண்டு கால உதவித் தொகையுடன் கூடிய இலவச போட்டித்தேர்வு பயிற்சி, வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடத்தப்படயுள்ளது.

இந்த இலவச அரசு போட்டித்தேர்வு மற்றும் கணினி மென்பொருள், கணினி வன்பொருள் தேசிய தொழில் பயிற்சி கவுன்சில் சான்றிதழ்களுடன் கூடிய பயிற்சியில் சேர ஆர்வமுள்ள பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் பட்டபடிப்பு முடித்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கணினி மென்பொருள் மற்றும் கணினி வன்பொருள் பயிற்சிக்கான வயது வரம்பு 18-30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 1,000 உதவித்தொகை, இலவச போட்டித்தேர்வு பயிற்சி புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்படும்.

பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்களை புதுச்சேரி, நடேசன் நகரில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், துணை பிராந்திய வேலை வாய்ப்பு அதிகாரி அலுவலகத்தில் பெற்று, வரும் 20ம் தேதிக்குள், பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு 0413- 2200115, 88700 73622, 99438 43675 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us