/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலப்பு திருமண ஊக்கத்தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தி அரசாணை
/
கலப்பு திருமண ஊக்கத்தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தி அரசாணை
கலப்பு திருமண ஊக்கத்தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தி அரசாணை
கலப்பு திருமண ஊக்கத்தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தி அரசாணை
ADDED : பிப் 06, 2025 07:02 AM
புதுச்சேரி; கலப்பு திருமண ஊக்கத்தொகை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை மூலமாக, கலப்பு திருமண ஊக்கத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஹிந்து ஆதி திராவிடர், ஹிந்து ஆதிதிராவிடர் அல்லாதவருடன் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, 2.50 லட்சம் ரூபாய் ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என, முதல்வர் ரங்கசாமி கடந்த சட்டசபை கூட்டத்தில் அறிவித்தார். அதை தொடர்ந்து, ஆதிதிராவிடர் நல துறை மூலம் கோப்பு தயாராகி கவர்னருக்கு அனுப்பப்பட்டது.
கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்த சூழ்நிலையில், தற்போது கலப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு ஊக்கத்தொகை ரூ. 3 லட்சமாக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை, ஆதிதிராவிடர் நல துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில், கலப்பு திருமணம் செய்த ஆதிதிராவிட தம்பதிக்கு, நாட்டுடமை ஆக்கப்பட்ட வங்கியில், மணப்பெண்ணின் பெயரை முதன்மையாக கொண்டு, 3 லட்சம் ரூபாய் வங்கியில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை, ஆதிதிராவிடர் நல துறை சார்பு செயலர் கந்தன் பிறப்பித்துள்ளார்.