/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பல் மருத்துவ கல்லுாரிக்கு பியரி பவுச்சர் அகாடமி விருது
/
அரசு பல் மருத்துவ கல்லுாரிக்கு பியரி பவுச்சர் அகாடமி விருது
அரசு பல் மருத்துவ கல்லுாரிக்கு பியரி பவுச்சர் அகாடமி விருது
அரசு பல் மருத்துவ கல்லுாரிக்கு பியரி பவுச்சர் அகாடமி விருது
ADDED : நவ 30, 2024 04:30 AM
புதுச்சேரி, : கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை அரசு பல் மருத்துவக் கல்லுாரிக்கு, பியரி பவுச்சர் அகாடமி மூலம் சிறந்த பல் மருத்துவக் கல்லுாரிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல பியரி பவுச்சர் அகாடமி ஆண்டுதோறும் சிறந்த பல் மருத்துவக் கல்லுாரிகளுக்கான விருதுகளை வழங்கி வருகிறது.
அதன்படி, 2024ம் ஆண்டிற்கான சிறந்த பல் மருத்துவக் கல்லுாரிகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.
அதில், அகில இந்திய அளவில் ஆராய்ச்சிக்கான சிறந்த பல் மருத்துவ கல்லுாரிக்கான விருதிற்கு, கோரிமேடு மகாத்மா காந்தி முதுநிலை அரசு பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வரும் 6ம் தேதி டில்லியில் நடக்கும் விழாவில், விருதினை பெற்றுக் கொள்ள மகாத்மா காந்தி முதுநிலை அரசு பல் மருத்துவ நிறுவனத்தின் முதல்வர் கென்னடி பாபுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக்கல்லுாரி 1990ம் ஆண்டு துவங்கப்பட்டு, புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த மக்களுக்கு வாய், தாடை மற்றும் பல் மருத்துவ சிகிச்சைகளை சிறந்த முறையில் அளித்து வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை பல் மருத்துவ மாணவர்களுக்கு சிறந்த முறையில் பல் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பயிற்றுவிக்கப்படுகிறது.
புதுச்சேரி முதல்வரை தலைவராக கொண்ட, இக்கல்லுாரி முழுமையாக புதுப்பிக்கப்பட்டு உலகத்தரம் வாய்ந்த அதி நவீன உபகரணங்கள் கொண்டு சிகிச்சை அளித்து வருகிறது.