/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதாரத் துறை இயக்குனர் பதவி நிரப்ப அரசு மருத்துவர் சங்கம் வலியுறுத்தல்
/
சுகாதாரத் துறை இயக்குனர் பதவி நிரப்ப அரசு மருத்துவர் சங்கம் வலியுறுத்தல்
சுகாதாரத் துறை இயக்குனர் பதவி நிரப்ப அரசு மருத்துவர் சங்கம் வலியுறுத்தல்
சுகாதாரத் துறை இயக்குனர் பதவி நிரப்ப அரசு மருத்துவர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : செப் 29, 2024 06:17 AM
புதுச்சேரி : சுகாதாரத்துறையில் இயக்குனர் பதவியை நிரப்ப வேண்டுமென, புதுச்சேரி அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்க தலைவர் அன்புசெந்தில், செயலாளர் சரவணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி சுகாதாரத்துறையில் இயக்குனர் பதவி ஒன்னரை மாதமாக காலியாக உள்ளது. இப்பணிக்கு புதுச்சேரி அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில், சீனியாரிட்டி அடிப்படையில் இயக்குனர் பதவியை நிரப்ப வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தது. சிலர் இயக்குனர் பதவிக்கு ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் கொண்டு நிரப்ப வேண்டும் என, குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி நல வழித் துறையில் யு.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்பட்ட ஜி.டி.எம்.ஓ., மருத்துவர்கள் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் என இருதரப்பினர் பணியாற்றி வருகிறோம்.
இந்த இரு பிரிவு மருத்துவர்களின் பணியும், பணி மூப்பின் அடிப்படையில் செய்யப்படும் உயர் பதவி நியமனங்களுக்கு, புதுச்சேரி நல வழித் துறை பணி விதிகள் 1998ன் படி வரையறுக்கப்பட்டுள்ளது.
பணி விதிகள் படி, இயக்குனர் நியமனத்தில் மேற்படி இரு பிரிவு மருத்துவர்களையும் சேர்த்து ஒரே பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்று உள்ளது. எனவே, சீனியரிட்டி அடிப்படையில் இயக்குனர் பதவியை நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.